Home » » ஒக்ரோபர் 21ம் திகதி அஜித்துக்கு அறுவை சிகிச்சை!

ஒக்ரோபர் 21ம் திகதி அஜித்துக்கு அறுவை சிகிச்சை!

Written By AJENTH on Sunday, March 24, 2013 | 12:01 AM

புதிய படங்களில் நடித்து முடித்ததும் நடிகர் அஜித் குமார் காலில் அறுவை சிகிச்சை நடக்க இருக்கிறது. ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் விஷ்ணு வர்தன் இயக்கத்தில் வலை என்ற படத்தில் நடித்து வருகிறார் அஜித்.

இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்ற போது, வில்லன்களுடன் மோதுகிற ஒரு சண்டை காட்சி படமாக்கப்பட்டது. ஒரு காரில் இருந்து இன்னொரு கார் மீது அஜித் தாவுவது போன்ற காட்சியில், ‘டூப்’ போடாமல் அவரே நடித்தார். அப்போது அவருடைய வலது காலில் பலத்த அடிபட்டது.

உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவருடைய காலில் கட்டுப்போட்டு டொக்டர்கள் சிகிச்சை அளித்தார்கள். பின்னர் காலில் உள்ள வலியை பொறுத்துக்கொண்டு அஜித் தொடர்ந்து அந்த படத்தில் நடித்தார். அதற்காக வலி நிவாரண மாத்திரை–மருந்துகளை சாப்பிட்டுக்கொண்டு, படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

காலில் அவருக்கு நாளுக்கு நாள் வலி அதிகமானது. மீண்டும் டொக்டரிடம் சென்று பரிசோதித்துக் கொண்டபோது அறுவை சிகிச்சை செய்தால்தான் வலி குறையும் என்று சொன்னார்கள். மேலும் இதற்கு பின்பு குறைந்தபட்சம் 4 மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்கள்.

இந்நிலையில் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து கொண்டால் பட அதிபர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் ஒப்பந்தமான 2 படங்களில் நடித்து முடித்துக் கொடுத்தபின்பு, அறுவை சிகிச்சை செய்து கொள்ள அஜித் முடிவு செய்திருக்கிறார். இதன்படி ஒக்ரோபர் 21ம் திகதி, அஜித் அறுவை சிகிச்சை செய்து கொள்ள சம்மதித்து இருக்கிறார்.

அதன்பின்பு 4 மாதங்கள் ஓய்வு எடுக்கிறார். இதனால் புதிய பட வாய்ப்புகள் எதையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.
Share this post :

Post a Comment

 
Copyright © 2013. jaffnafilms - All Rights Reserved