குளோபல் இன்போடெய்ன் மென்ட் சார்பில் மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் படம் 'பட்டத்து யானை'. இதில் நாயகனாக விஷால் நடிக்கிறார். நாயகியாக ஐஸ்வர்யா நடிக்கிறார். இவர் நடிகர் அர்ஜுன் மகள். சீதா, ஜெகன், பட்டிமன்றம் ராஜா, சபேஷ்கார்த்திக், வடபோச்சே சரித்திரன், சித்ரா லெட்சுமணன், கிருஷ்ணமூர்த்தி, நான் கடவுள் ராஜேந்திரன், மயில்சாமி, ஜான்விஜய், பெசன்ட் நகர் ரவி, மும்பை வில்லன் விஜய்சர்மா, அஜய்சேனா ஆகியோரும் நடிக்கின்றனர்.
இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஜி.பூபதிபாண்டியன் இயக்குகிறார். படம் பற்றி அவர் சொல்கிறார். விஷாலுக்கு அவரது திரை வாழ்வின் பரபரப்பை அதிகப்படுத்தும் வகையிலும் சந்தானத்துக்கு இன்னொரு பரிமானம் காட்டும் வகையிலும் படம் இருக்கும். ஐஸ்வர்யாவுக்கு அழுத்தமான அறிமுகமாக அமையும்.
பூங்காவனம் கேட்டரிங் சர்வீஸ் நடத்துகிறார் சந்தானம். ஊர் ஊராக போய் சீசனுக்கு மட்டும் சமையல் செய்வதை விட்டு ஒரே இடத்தில் ஒட்டல் வைத்து சமையல் திறனை காட்டி ஆண்டு முழுவதும் பிசியாக இருப்போம் என்று அவர் யோசனை சொல்ல உடன் இருக்கும் விஷால் நல்ல திட்டம் என ஏற்கிறார் ஓட்டல் வைப்பதற்காக இருவரும் காரைக்குடியில் இருந்து திருச்சி புறப்படுகின்றனர்.
இடையில் என்னென்ன பிரச்சினைகளை சந்தித்தார்கள் என்பது முழு நீள நகைச்சுவையில் படமாகிறது. காரைக்குடி, மதுரை, திருச்சி, ஸ்ரீரங்கத்தில் படப்பிடிப்பு நடந்துள்ளது. ஒளிப்பதிவு: எஸ்.வைத்தி, இசை: எஸ்.எஸ்.தமன், பாடல்: நா.முத்துக்குமார், மதன் கார்க்கி, நடனம் : ராஜு சுந்தரம், எடிட்டிங்: ஏ.எல்.ரமேஷ்.

Post a Comment