Home » » ஆனந்த கண்ணீர் வடித்த விக்ரம்!

ஆனந்த கண்ணீர் வடித்த விக்ரம்!

Written By AJENTH on Sunday, March 24, 2013 | 12:09 AM

பாலாவின் இயக்கத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் பரதேசி படத்தை பார்த்து விட்டு ஆனந்த கண்ணீர் வடித்துள்ளார் சியான் விக்ரம். இயக்குனர் பாலா, பரதேசி படத்தை நட்சத்திரங்களுக்கு சிறப்பாக திரையிட்டு காட்ட வில்லை.

இருப்பினும் பாலா படமென்றாலே மனதை உருக்கும் காட்சிகள் இடம் பெற்றிருக்கும். இதனால் சியான் விக்ரம், சினேகா, பிரசன்னா என படம் பார்த்த அனைவரும் பாலா வீட்டிற்கே சென்று பாராட்டியுள்ளார்கள்.

இதில் சியான் விக்ரம், ஆனந்த கண்ணீர் வடித்ததுடன் எப்போது வேண்டுமானாலும் உங்களது படத்தில் நடிக்கிறேன் என வாக்குறுதி தந்து விட்டு திரும்பியுள்ளார். மேலும் பாலாவின் மனைவி மதிமலர், அந்த குன்றின் மீது அதர்வா ஏறி உட்கார்ந்து கொண்டு ஞாயமாரே... என்று கதறுகிற போது சீட்டை விட்டே எழுந்துவிட்டாராம்.

அந்த கூட்டத்தில் வேதிகா வந்ததும் கைதட்ட ஆரம்பித்தவர் படம் முடிகிற வரைக்கும் தட்டிக் கொண்டேயிருந்தாராம். இப்படி ஒரு முடிவை வைத்திருக்கிறேன் என்று மனைவியிடம் கூட விவாதிக்கவில்லை பாலா என்பது இதன் மூலம் புலனாகிறதல்லவா? அதிருக்கட்டும்... படத்தின் கலெக்ஷன் எப்படி? பாலா படங்கள் எதற்கும் இப்படி ஒரு மோசமான கலெக்ஷன் இதற்கு முன்பு இருந்ததேயில்லை என்கிறார்கள்.

இதனால் பாலா கடும் அப்செட்டில் இருப்பதாகவும் தகவல்கள் உலாவருகின்றன.
Share this post :

Post a Comment

 
Copyright © 2013. jaffnafilms - All Rights Reserved