Home » » ஹன்சிகாவுக்கு கொடுத்தது ஆபாச முத்தமா? காதல் முத்தமா? ஆர்யா விளக்கம்

ஹன்சிகாவுக்கு கொடுத்தது ஆபாச முத்தமா? காதல் முத்தமா? ஆர்யா விளக்கம்

Written By AJENTH on Monday, March 25, 2013 | 12:39 AM

சமீபகாலமாக முன்னணி ஹீரோக்கள்கூட தங்களுடன் ஒரு முன்னணி காமெடியனை சேர்த்துக்கொண்டுதான் கதையை நகர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அந்த அளவுக்கு காமெடி பின்னணியில்தான் இன்றைக்கு படங்களின் வெற்றி தீர்மானிக்கப்பட்டு வருகிறது.

அதனால் தான் நடிக்கும் எல்லா படங்களிலுமே சந்தானம் போன்ற காமெடியன் அவசியம் வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் ஆர்யா. அதனால் கதை கேட்டு முடித்ததுமே யார் கதாநாயகி என்று கேட்பதை விடுத்து, யார் காமெடியன் என்றுதான் கேட்கிறார்.

இயக்குனர்கள் வேறு காமெடியன்களில் பெயரைச்சொன்னால், எனக்கு சந்தானம்தான் வேண்டும். அப்போதுதான் நான் கால்சீட் தருவேன் என்று உறுதியாக சொல்கிறாராம். இருப்பினும், இப்படி எத்தனை நாளைக்கு காமெடியனை நம்பியே காலம் தள்ளுவது என்று சமீபத்தில் யோசித்த ஆர்யா, சேட்டை படத்திலிருந்து முத்த ஸ்பெசலிஸ்டாக வேண்டும் என்று திட்டமிட்டார்.

ஒரு காலத்தில் கமல் எப்படி முத்த நடிகராக இருந்தாரோ அதேபோல் தானும் ஒரு இமேஜை ஏற்படுத்திக்கொள்ள திட்டமிட்டார். அதனால் ஆர்யாவின் ஆர்வத்தை புரிந்து கொண்டு சேட்டை படத்தில் ஒரு முத்தக்காட்சியும் வைக்கப்பட்டது.

ஆனால் அதைப்பற்றி அவர் ஓவர் பில்டப் கொடுத்து வந்ததால், ஹன்சிகாவுக்கு அவர் கொடுத்துள்ள முத்தம் அதிரடியானது. ஆபாசத்தை தூண்டும் வகையில் அமைந்திருப்பதாக செய்தி பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆர்யா, இப்போது அதுபற்றி தன்னிடம் கேட்பவர்களிடத்தில், சேட்டை படத்தில் ஹன்சிகாவுடன் நான் நடித்த முத்தக்காட்சி, ஆபாசத்தை தூண்டும் வகையில் இல்லை, அது காதல் முத்தம். ரொம்ப அழகாக அதை படமாக்கியுள்ளார் இயக்குனர் என்று ஹாட்டான டாப்பிக்கை கூல் பண்ணி வருகிறார்.
Share this post :

Post a Comment

 
Copyright © 2013. jaffnafilms - All Rights Reserved