மழை படத்தில் கொட்டும் மழையில் நனைந்து நடனமாடியபடி கோலிவுட் ரசிகர்களை மீட் பண்ணியவர் ஸ்ரேயா. முதல் படத்திலேயே அவரது நடிப்பு இளமை ஆரவாரத்துடன் இருந்ததால், தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பினை பெற்ற ஸ்ரேயா, சிவாஜி படத்தில ரஜினியுடன் நடித்து முன்னணி நடிகையானார்.
ஆனால் உச்ச நடிகரையே அவர் தொட்டு விட்டதால் அதன்பிறகு மற்ற நடிகர்கள் ஏனோ அவர் பக்கம் திரும்பவில்லை. அந்த சமயத்தில் வடிவேலு நடித்த இந்திரலோகத்தில் நா.அழகப்பன் என்ற படத்தில் அவருடன் குத்துப்பாட்டுக்கு ஆடினார். அதனால் அதன்பிறகு சான்ஸ் தருவதாக சொல்லியிருந்தவர்கள்கூட அதை காரணம் காட்டி ஸ்ரேயாவை கழட்டி விட்டனர்.
அதனால் சரியான படங்கள் இல்லாமல் தெலுங்கு, கன்னடம் என்று காலம்தள்ளி வந்த ஸ்ரேயா இப்போது தமிழ், கன்னடத்தில் தயாராகியுள்ள சந்திரா படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் அவருக்கு இளவரசி வேடமாம். என்றாலும், அவரது முகம், உடம்பை இளமையாக காட்டுவதற்கு ரொம்பவே சிரமப்பட்டார்கள்.
காரணம், ஸ்ரேயாவின் முகத்தில் முன்பு மாதிரி இளமை இல்லையாம். மாறாக முதிர்ச்சிதான் பல இடங்களில் தென்பட்டதாம். அதனால் பல காட்சிகளில் க்ளோசப் வைக்காமல் லாங் ஷாட்டில் டேக் வைத்து படமாக்கியுள்ளனர்.
அதன்காரணமாக, பீல்டில் தொடர்ந்து தான் நீடிக்க வேண்டுமென்றால் இன்னும் தனது உடம்பில் கூடுதல் இளமை வெளிப்பட வேண்டும் என்று இப்போது இயற்கை சிகிச்சைகளை மேற்கொள்ளத் தொடங்கியிருக்கிறாராம்.
அதோடு, முகத்தை வசீகரப்படுத்தும் அதிநவீன சிகிச்சை ஒன்றையும் விரைவில் மேற்கொள்ளப்போகிறாராம் ஸ்ரேயா. அதற்காக வெளிநாடு செல்லும் திட்டமும் உள்ளதாம்.

Post a Comment