Home » » தேவையான கவர்ச்சியை தடையின்றி வெளிப்படுத்துவேன் - நடிகை

தேவையான கவர்ச்சியை தடையின்றி வெளிப்படுத்துவேன் - நடிகை

Written By AJENTH on Monday, March 25, 2013 | 12:44 AM


ராமன்தேடிய சீதை என்ற படத்தில் தமிழுக்கு வந்த மலையாள நடிகை ரம்யா நம்பீசன். அதன்பிறகு ஆட்டநாயகன், பீட்சா போன்ற படங்களில் நடித்தவர், இப்போது விமலுக்கு ஜோடியாக ரெண்டாவது படம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் கதைப்படி அவருக்கு டீச்சர் வேடமாம்.

ஆனபோதும், காதல் ட்ராக்கில் ஆடைகளை அளவுக்கதிகமாக காத்து வாங்க விட்டுள்ளாராம் ரம்யா. பீட்சா படத்தில் நடித்தபோது ரொம்பவே பெருத்திருந்த உடல்கட்டையும் ஓரளவு அவர் கரைத்திருப்பதால், கிளாமர் காட்சிகள் நன்றாக ஒர்க்அவுட்டாகி உள்ளதாம்.

அதோடு, இதுவரை நடித்த படங்களில் ஹீரோக்களை அதிகமாக தன்னை ஒட்டவிடாமல், அவர்கள் தன்னை நெருங்கினால் கைகளால் தடுத்துக்கொள்ளும் ரம்யா, இந்த படத்தில் அந்த மாதிரி எந்த தடைகளையும் ஏற்படுத்தாமல் விமலுக்கு பரிபூரண சுதந்திரம் கொடுத்து தானும் சுதந்திரமாக நடித்துள்ளாராம். கூடவே இதுவரையில்லாத கிளாமரையும் வாரி வழங்கியிருக்கிறாராம்.

அதனால் இனி ரம்யா நம்பீசன் மீதிருந்த குடும்ப நடிகை என்கிற இமேஜ் காணாமல் போய் விடும் என்கிறார்கள். ஆனால் இதுபற்றி ரம்யாவைக்கேட்டால், குடும்பப்பா‌ங்கான நடிகை என்பது பெருமைதான். ஆனால் இன்றைக்கு சினிமா இருக்கிற நிலையில் அதுவே வளர்ச்சிக்கு பெரிய தடையாகவும் இருக்கிறது.

அதனால் என்மீது விழுந்திருக்கும் குடும்ப நடிகை என்ற இமேஜை மாற்றவே முயற்சித்து வருகிறேன். அந்தவகையில் இந்த ரெண்டாவது படம் வெளியாகும்போது நானும் பக்கா கமர்சியல் நடிகையாகி விடுவேன் என்று சொல்லும் ரம்யா நம்பீசன், மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்த அசின், நயன்தாரா போன்ற நடிகைகள் ஆரம்பத்தில் அடக்கி வாசித்தாலும், பின்னர் தேவையான கவர்ச்சியை வெளிப்படுத்தியதைப்போன்று நானும் இனி தேவையான கிளாமரை தடையின்றி வெளிப்படுத்துவேன் என்கிறார்.
Share this post :

Post a Comment

 
Copyright © 2013. jaffnafilms - All Rights Reserved