Home » » காமெடி நடிகர் சந்தானம் ஜோடியாக நடிப்பது ஏன்? - சந்தியா விளக்கம்

காமெடி நடிகர் சந்தானம் ஜோடியாக நடிப்பது ஏன்? - சந்தியா விளக்கம்

Written By AJENTH on Saturday, March 23, 2013 | 8:20 PM

காதல் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி முதல் படத்திலேயே பரபரப்பாக பேசப்பட்டவர் சந்தியா. தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்தார். பரத், பிருத்விராஜ், ஷாம், பிரசன்னா போன்ற இளம் ஹீரோக்கள் ஜோடியாக நடித்தார்.

 இரு வருடங்களுக்கு முன்பு இரும்புக் கோட்டை முரட்டுச்சிங்கம், படத்தில் நாயகியாக நடித்தார். அதன் பிறகு அவருக்கு தமிழ் படங்கள் இல்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு யாயா என்ற படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்த மாகியுள்ளார்.

இதில் காமெடி நடிகர் சந்தானம் ஜோடியாக நடிக்கிறார். கதாநாயகியாக இருந்தவர் காமெடியருக்கு ஜோடியாகி விட்டாரே என்று விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. சந்தானம் ஜோடியாக நடிப்பது ஏன் என்பதற்கு சந்தியா விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது:-

 யாயா படம் காமெடி கதை. இதில் நான் பெண் போலீஸ் வேடத்தில் நடிக்கிறேன். சந்தானத்துக்கு ஜோடியாக வருகிறேன். முதல் தடவையாக இப்படத்தில் நான் காமெடி வேடம் ஏற்கிறேன்.

எனவே அது என் திரையுலக வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும் முழுக்க நகைச்சுவை படமாக உருவாகிறது. ரசகிர்களுக்கு பிடித்த படமாக இருக்கும். இவ்வாறு சந்தியா கூறினார்.
Share this post :

Post a Comment

 
Copyright © 2013. jaffnafilms - All Rights Reserved