கிஸ் கேட்டு கிறங்கடித்த நமீதா! குஷியான டைரக்டர்!

‘மச்சான்ஸ்' புகழ் நமீதா விழா மேடையிலேயே டைரக்டரிடம் ‘கிஸ்' கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகாந்த் என்ற புதிய இயக்குனரின் ‘ஹாய் மீரா ஐயம் கிருஷ்ணன்' என்ற குறும்படத்தின் ஆடியோ ரிலீஸ் சென்னையில் நடைபெற்றது.

கிருஷ்ணகாந்த் என்ற புதிய இயக்குனரின் ‘ஹாய் மீரா ஐயம் கிருஷ்ணன்' என்ற குறும்படத்தின் ஆடியோ ரிலீஸ் சென்னையில் நடைபெற்றது. இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் நமீதாவும் கலந்து கொண்டார்.

அப்போதுதான் கிஸ் கேட்டு கிறங்கடித்தார் நமீதா. விழாவில் பேசிய குறும்படத்தின் டைரக்டர் கிருஷ்ணகாந்த் " ஒரு குறும்படத்துக்கு ஆடியோ ரிலீஸ் செய்வது என்பது இதுதான் முதல்முறை. என்னுடைய இந்த முயற்சிக்கு என் அப்பாவும், அம்மாவும் தான் முக்கிய காரணம்.

அவர்கள் தான் என்னை எப்போதுமே உற்சாகப்படுத்திக் கொண்டிருப்பார்கள். நான் இப்போ ஒண்ணு பண்ணப்போறேன், அதை யாரும் தப்பா நெனைச்சுக்காதீங்க, என்று சொல்லிவிட்டு மேடையிலேயே தனது அப்பாவையும், அம்மாவையும் கட்டிபிடித்து பாசமாக முத்தம் கொடுத்தார். 

இதை பார்த்துக்கொண்டிருந்த நடிகை நமீதா "தன் கன்னத்தை காட்டி தனக்கும் முத்தம் வேண்டும் என்று சிரித்துக் கொண்டே சைகையால் கேட்டார்". உடனே " இதற்குத்தான் ஆசைப்பட்டாயா கிருஷ்ணகாந்தா.." என்று சிரித்த டைரக்டர், இதை விட எனக்கு வெறென்ன வேண்டும், யாராவது பொறாமைப்பட்டால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது" என்று சொல்லி விழா மேடைய கலகலப்பாக்கினார்.

 இந்த விழாவில் டைரக்டர் சமுத்திரக்கனி,நடிகர்கள் ஸ்ரீகாந்த்,சாந்தனு பாக்யராஜ், நடிகை நமீதா உட்பட பலரும் கலந்து கொண்டு டைரக்டரை வாழ்த்தி பேசினர்.

நயன்தாராவுடன் மிக நெருக்கமாக இருப்பது உண்மைதான்!- மனம் திறக்கும் ஆர்யா


சினிமாவில் எந்த நடிகையுடனும் இல்லாத அளவுக்கு நெருக்கமாக நயன்தாராவுடன் பழகி வருவது உண்மைதான். ஆனால் அது திருமணமாக மாறுமா என்றெல்லாம் சொல்ல முடியாது என்று நடிகர் ஆர்யா கூறியுள்ளார். கடந்த சில வாரங்களாக சினிமா உலகில் அதிகம் கிசுகிசுக்கப்படுவது நயன்தாரா - ஆர்யா நெருக்கம்தான்.

நயன்தாரா ஏற்கெனவே சிம்பு, தனுஷ், பிரபுதேவா ஆகியோருடன் நெருக்கமாக இருந்தவர். சிம்பு - நயன் காதல் மற்றும் மோதல் ரொம்ப பிரபலம். அதேபோல, நயன்தாராவை திருமணம் செய்ய தன் மனைவியை விவாகரத்து செய்தவர் பிரபு தேவா. ஆனால் அந்தக் காதலும் முறிந்துவிட்டது. இப்போது நயன்தாராவின் புதிய காதலன், அதையும் தாண்டி திருமணம் செய்து கொள்ளப் போகிறவர் என ஆர்யாவைக் குறிப்பிடுகிறார்கள். இதுகுறித்து ஆர்யாவே இப்போது மனம் திறந்துள்ளார்.

அவர் கூறுகையில், "நானும் நயன்தாராவும் நெருங்கிப் பழகுவது உண்மைதான். இந்த இன்டஸ்ட்ரியில் எனக்கு ஏகப்பட்ட நடிகைகளுடன் நல்ல பழக்கம் உள்ளது. ஆனால் அதையெல்லாம் தாண்டி, நெருக்கமான உறவு நயன்தாராவுடன் உள்ளது. அவருடன் பல தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்ள முடிகிறது.

எங்கள் உறவு பற்றி பத்திரிகைகளில் வரும் செய்திகளுக்கு எல்லாம் பதில் சொல்வது கஷ்டம். எங்கள் நட்பின் அடுத்த கட்டம் என்ன என்பது குறித்தெல்லாம் இப்போது சொல்ல முடியாது," என்றார். 

விஜய்யின் தலைவா பட ஷுட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ்!

நடிகர் விஜய்யின் தலைவா பட ஷுட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ்...














புதிய நடிகைகளின் அதிரி புதிரி பட புகைப்படங்கள்!

புதிய நடிகைகளின் அதிரி புதிரி பட புகைப்படங்கள்...















சமந்தா களட்டிவிட்ட நாயகர்களை துரத்திப் பிடிக்கும் அமலாபால்!

ஆந்திர சினிமாவில் சமந்தாவைப்பற்றிய காதல் கிசுகிசுக்கள் வெளியாவது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. என்னதான் அவர் மறுப்பு செய்திகள் கொடுத்தாலும் அதை யாரும் நம்புவதாக இல்லை. அதனால், இப்போது தன்னை மற்றவர்கள் நம்ப வேண்டும் என்பதற்காகவே, உள்ளூர் மற்றும் வெளியூர் படப்பிடிப்புகளுக்கு செல்லும்போது தனியாக செல்வதை தவிர்த்து தனது அம்மாவை உடன் கூட்டிச்செல்கிறார் சமந்தா.

அதோடு மட்டுமின்றி, ஸ்பாட்டில் நடிகர்களுடன் ஜாலியாக கடலை போடுவது, அரட்டையடிப்பதையெல்லாம் ஏறக்கட்டி வருகிறார். நன்றாக பழகிய ஹீரோக்கள் நட்புடன் புன்னகைத்தால்கூட அதை கண்டும் காணாதவர்போல் முகத்தை திருப்பிக்கொள்கிறாராம். இதனால் சமந்தாவின் நட்பு வட்டார நடிகர்கள் இப்போது அவர் மீது அதிருப்தியில் இருக்கிறார்களாம்.

இதை அறிந்த அமலாபால், இதுதான் சரியான தருணம் என்று சமந்தா ஏறக்கட்டும் அத்தனை ஹீரோக்களையும் தன்பால் இழுக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளார். தானே வலிய அவர்களை தேடிச்சென்று நட்பை வளர்க்கும் அமலாபால், தனக்கு ஆதரவு தருமாறும் அன்பான வேண்டுகோள் வைக்கிறாராம்.

இதையடுத்து, சமந்தா மீது அதிருப்தியில் இருக்கும மேற்படி நடிகர்கள், அமலாபாலின் நட்பில் திருப்தி அடைந்து தங்களிடம் கதை சொல்லவரும் இயக்குனர்களிடம் கதாநாயகிக்கு அவரது பெயரை முன்வைக்கிறார்களாம். இதனால் தற்போது சத்தமில்லாமல அமலாபாலின் தெலுங்கு சினிமா மார்க்கெட் எகிறத் தொடங்கியிருப்பதோடு, அவரது படக்கூலியும் கண்டபடி எகிறி வருகிறதாம்.

எம்.எல்.ஏ தேர்தலில் போட்டியிடும் நடிகை பூஜா காந்தி!

கொக்கி படத்தின் மூலம் அறிமுகமான பூஜா காந்தி. சில தமிழ் படங்களில் நடித்து விட்டு பிறகு கன்னடத்திற்கு சென்றார். அங்கு நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தார். அதே கையோடு அரசியலுக்கும் சென்றார்.

கர்நாடக ஜனதா கட்சியில் சேர்ந்தார். கடந்த தேர்தலில் போட்டியிட விரும்பினார். ஆனால் கட்சி சீட் கொடுக்கவில்லை. இதனால் அந்தக் கட்சியிலிருந்து விலகினார். 'அரசியல் கட்சியில் இருந்தால் பதவியில் இருக்க வேண்டும் இல்லாவிட்டால் அரசியலே வேஸ்ட்' என்பது அவரது கருத்து. தற்போது அவர் பி.எஸ்.ஆர் காங்கிரசில் இணைந்துள்ளார்.

இந்தக் கட்சி பூஜாவை எம்.எல்.ஏவாக ஆக்கியே தீருவது என்று சபதம் எடுத்துக் கொண்டுள்ளது. அதனால் கட்சி உறுதியாக ஜெயிக்கும் வாய்ப்புள்ள ரெய்ச்சூர் தொகுதியில் பூஜாவை நிறுத்த முடிவு செய்துள்ளது. இந்த தொகுதி, கட்சியின் நிறுவனர் ஸ்ரீராமுலுவின் சொந்த தொகுதியாகும். இங்கு இந்த கட்சிதான் தொடர்ந்து ஜெயித்து வருகிறது.

எனவே பூஜாவும் ஜெயிப்பது உறுதி என்கிறார்கள். ஆனால் பெரும்பாலும் கர்நாடக அரசியலில் நடிகர்களின் செல்வாக்கு குறைவுதான். கடந்த தேர்தலில் அம்ரீசையே சொந்த தொகுதியில் தோற்கடித்தவர்கள் கர்நாடக மக்கள். அதனால் பூஜாவின் வெற்றி அவ்வளவு எளிதானதல்ல என்கிறார்கள்.

இதற்கிடையில் நிச்சயம் செய்த மாப்பிள்ளையை நிராகரித்ததும், சமீபத்தில் வெளியான டாப்லெஸ் படங்களும் சாண்டல்வுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

டிரைவரை தயாரிப்பாளராக மாற்றிய அதிஸ்டம்!

சினிமா கம்பெனிகளில் டிரைவராக வேலை பார்த்தவர் ஆர்.செந்தில்குமார். அவர் இப்போது படத் தயாரிப்பாளராகி இருக்கிறார். படத்தின் பெயர் 'சிக்கி முக்கி'. ஜித்தேஷ், நார்வே நகுலன், திஷா பாண்டே, சூரி, கஞ்சா கருப்பு நடித்துள்ளனர். ஸ்ரீகந்தராஜா இயக்கி உள்ளார்.

தயாரிப்பாளரானது பற்றி செந்தில்குமார் கூறியதாவது: 25 வருஷமா சினிமா கம்பெனிகளுக்கு கார் ஓட்டினேன். சினிமாவின் நெளிவு சுழிவெல்லாம் எனக்கு அத்துப்படி. அதான் நானும் படம் தயாரிக்க வந்துட்டேன். இந்தப் படம் முழுக்க மலேசியாவுல நடக்குது.

ஒரே ஒரு பாட்டு மட்டுந்தான் சென்னையில நடக்குது. தமிழ்நாட்டு பொண்ணை மலேசிய டாக்டர் ஒருத்தர் கல்யாணம் பண்ணிக்கிட்டு மலேசியா கூட்டிட்டு போறார். அங்க ஒரு காமகொடுரன்கிட்ட மாட்டிக்கிட்டு எப்படி கஷ்டப்படுறாங்க. அவன்கிட்டேருந்து எப்படி தப்பிக்கிறாங்க என்பதுதான் கதை.

இதுல காமகொடூரனா நடிக்கிறதுதான் ஹீரோ ஜித்தேஷ். பாதிக்கப்படுற பொண்ணா நடிக்கிறது பூஜா, அவரோட தங்கையாக வந்து பழிவாங்குறது திஷா பாண்டே. நிறைய பெட் ரூம் சீன் இருக்கு. சென்சார்ல 7 கட் கொடுத்து யூஏ கொடுத்திருக்காங்க. ஏப்ரல் 5ந் தேதி ரிலீஸ் பண்றோம். என்றார்.
 
Copyright © 2013. jaffnafilms - All Rights Reserved