Home » » டிரைவரை தயாரிப்பாளராக மாற்றிய அதிஸ்டம்!

டிரைவரை தயாரிப்பாளராக மாற்றிய அதிஸ்டம்!

Written By AJENTH on Tuesday, March 26, 2013 | 8:02 PM

சினிமா கம்பெனிகளில் டிரைவராக வேலை பார்த்தவர் ஆர்.செந்தில்குமார். அவர் இப்போது படத் தயாரிப்பாளராகி இருக்கிறார். படத்தின் பெயர் 'சிக்கி முக்கி'. ஜித்தேஷ், நார்வே நகுலன், திஷா பாண்டே, சூரி, கஞ்சா கருப்பு நடித்துள்ளனர். ஸ்ரீகந்தராஜா இயக்கி உள்ளார்.

தயாரிப்பாளரானது பற்றி செந்தில்குமார் கூறியதாவது: 25 வருஷமா சினிமா கம்பெனிகளுக்கு கார் ஓட்டினேன். சினிமாவின் நெளிவு சுழிவெல்லாம் எனக்கு அத்துப்படி. அதான் நானும் படம் தயாரிக்க வந்துட்டேன். இந்தப் படம் முழுக்க மலேசியாவுல நடக்குது.

ஒரே ஒரு பாட்டு மட்டுந்தான் சென்னையில நடக்குது. தமிழ்நாட்டு பொண்ணை மலேசிய டாக்டர் ஒருத்தர் கல்யாணம் பண்ணிக்கிட்டு மலேசியா கூட்டிட்டு போறார். அங்க ஒரு காமகொடுரன்கிட்ட மாட்டிக்கிட்டு எப்படி கஷ்டப்படுறாங்க. அவன்கிட்டேருந்து எப்படி தப்பிக்கிறாங்க என்பதுதான் கதை.

இதுல காமகொடூரனா நடிக்கிறதுதான் ஹீரோ ஜித்தேஷ். பாதிக்கப்படுற பொண்ணா நடிக்கிறது பூஜா, அவரோட தங்கையாக வந்து பழிவாங்குறது திஷா பாண்டே. நிறைய பெட் ரூம் சீன் இருக்கு. சென்சார்ல 7 கட் கொடுத்து யூஏ கொடுத்திருக்காங்க. ஏப்ரல் 5ந் தேதி ரிலீஸ் பண்றோம். என்றார்.
Share this post :

Post a Comment

 
Copyright © 2013. jaffnafilms - All Rights Reserved