Home » » மகள் கார்த்திகாவுக்கு தாசியாக நடிக்க பயிற்சி கொடுத்த ராதா!

மகள் கார்த்திகாவுக்கு தாசியாக நடிக்க பயிற்சி கொடுத்த ராதா!

Written By AJENTH on Sunday, March 24, 2013 | 5:46 AM

படம் ஒன்றில் தாசியாக நடிக்க கார்த்திகாவுக்கு அவரது அம்மா ராதா பயிற்சி கொடுத்துள்ளார். கார்த்திகா முதலில் தெலுங்கு படமான ஜோஷில் அறிமுகமானார். ஆனால் அந்த படம் ஓடவில்லை.

இதையடுத்து அவர் மலையாளத்தில் மகரமஞ்சு என்ற படத்தில் நடித்தார். கடந்த 2011ம் ஆண்டில் வெளி வந்த இந்த படத்தில் கார்த்திகா தாசியாக நடித்தார். ராஜா ரவி வரிமாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் அவர் பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

 மகரமஞ்சு படம் தமிழில் டப் செய்யப்பட்டு அப்சரஸ் என்ற பெயரில் வெளியாகவிருக்கிறது. மகரமஞ்சு படத்தில் தாசியாக நடிக்க மகள் கார்த்திகாவுக்கு ராதா தான் பயிற்சி கொடுத்தாராம்.

பிற நடிகைகள் தாசியாக நடித்த படங்களை மகளுக்கு போட்டுக் காட்டியதுடன் நிறைய டிப்ஸ் கொடுத்துள்ளார் ராதா. தமிழில் அப்சரஸ் வெளியான பிறகு அம்மா பயிற்சியில் கார்த்திகா எப்படி நடித்திருக்கிறார் என்று பார்ப்போம்.
Share this post :

Post a Comment

 
Copyright © 2013. jaffnafilms - All Rights Reserved