Home » » கூட்டம் - முன்னோட்டம்

கூட்டம் - முன்னோட்டம்

Written By AJENTH on Friday, March 22, 2013 | 12:26 AM

மம்மூத் மீடியா அண்ட் எண்டர்டைன்மென்ட் சார்பில் சுமந்த்குமார் ரெட்டி தயாரிக்கும் படம் கூட்டம் இதில் நாயகனாக நவீன்சந்திரா, நாயகியாக பியா நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் கிஷோர் வருகிறார்.

நாசர், சாய்குமார், மகாதேவன், பிரகதி ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி எம்.ஆர். ஜீவன் இயக்குகிறார். இவர் ராம்கோபால் வர்மாவிடம் உதவியாளராக பணியாற்றியவர்.

படம் பற்றி அவர் சொல்கிறார். படித்து விட்டு மக்களுக்காக ஆயுதம் ஏந்தும் நக்சலைட்டுகள் ஒரு கட்டத்தில் தங்கள் தவறுகளை உணர்ந்து போலீசிடம் தஞ்சம் அடைகின்றனர். அவர்கள் பணபலம், பதவிபலமிக்கவர்களின் அடியாளாக மாறவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

அதில் இருந்து மீள என்ன மாதிரியான முடிவுகளை எடுக்கிறார்கள் என்பது கதை. ஆக்ஷன் படமாக உருவாகிறது. சென்னை, பொள்ளாச்சி, குலுமனாலி, விசாகப்பட்டினம், தர்மபுரி, கடலூர் நகரில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

ஒளிப்பதிவு: சுதாகர், இசை: ஜேம்ஸ் வசந்தன், பாடல்: மதன்கார்க்கி, சுமதி, மோகன்ராஜ். நடனம்: சிவசங்கர், ஸ்டண்ட்: கணேஷ், எடிட்டிங்: மது.
Share this post :

Post a Comment

 
Copyright © 2013. jaffnafilms - All Rights Reserved