Home » » நாகராஜ சோழன் எம்.ஏ.,எம்.எல்.ஏ. - முன்னோட்டம்

நாகராஜ சோழன் எம்.ஏ.,எம்.எல்.ஏ. - முன்னோட்டம்

Written By AJENTH on Friday, March 22, 2013 | 12:25 AM

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி, எஸ்.ரவிச்சந்திரன் ஆகியோர் அமைதிப்படை படத்தின் 2-ம் பாகத்தை நாகராஜ சோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ. என்ற பெயரில் தயாரிக்கின்றனர்.

 இதில் சத்யராஜ் அரசியல்வாதி மற்றும் சி.பி.ஐ. அதிகாரி என இரு வேடங்களில் நடிக்கிறார். நாயகிகளாக கோமல்சரமா, வர்ஷா அஸ்வதி நடிக்கின்றனர். சீமான், ரகுவண்ணன், மிருதுளா, ஹன்சிகா, எம்.எஸ். பாஸ்கர், கிருஷ்ண மூர்த்தி, வையாபுரி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

 இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி மணிவண்ணன் இயக்குகிறார். அரசியல்வாதி சத்யராஜ் வில்லன் கேரக்டரில் வருகிறார். குறுக்கு வழியில் அரசியலில் படிப்படியாக முன்னேறுவதே கதை.

தற்கால அரசியல் நிகழ்வுகளை கோர்த்து காமெடி கதையம்சத்தில் தயாராகிறது. அரசியல் நையாண்டியும் இடம் பெறுகிறது. மணிவண்ணன் எடுபிடியாகவும் சீமான் லாரி டிரைவராகவும் வருகிறார்கள். ஒளிப்பதிவு: டி.சங்கர், இசை: ஜேம்ஸ் வசந்தன், பாடல்: நா.முத்துக் குமார்.
Share this post :

Post a Comment

 
Copyright © 2013. jaffnafilms - All Rights Reserved