Home » » அப்சரஸ் - முன்னோட்டம்

அப்சரஸ் - முன்னோட்டம்

Written By AJENTH on Friday, March 22, 2013 | 12:23 AM

புகழ் பெற்ற ஓவிய கலைஞர் ரவிவர்மன் உண்மைக் கதை அப்சரஸ் என்ற பெயரில் படமாகியுள்ளது. இதில் ரவிவர்மா கேரக்டரில் நாயகனாக சந்தோஷ் சிவன் நடிக்கிறார். இவர் பிரபல ஒளிப்பதிவாளர் ஆவார்.

இந்திய அளவில் ஒன்பதுமுறை சிறந்த ஒளிப்பதிவுக்கு விருதுகள் வாங்கியவர். நாயகியாக கார்த்திகா நடிக்கிறார். இவர் பழைய நடிகை ராதா மகள். பூர்ணா, நித்யாமேனன், மல்லிகாகபூர் ஆகியோரும் நாயகிகளாக நடிக்கின்றனர்.

 இப்படத்தை லெனின் ராஜேந்திரன் இயக்கியுள்ளார். பெண் தெய்வங்களுக்கு முதன் முதல் உருவம் கொடுத்து வரைந்தவர் ரவிவர்மன். ஆங்கிலேயர்களால் கவுவிக்கப்பட்டவர். தாசி பெண்ணின் அழகில் மயங்கி அவள் உருவத்தை கடவுளாக வரைந்து சர்ச்சையில் சிக்கி கோர்ட்டு வரை சென்றார்.

குறுநில மன்னன் மகளை நாட்டியக்காரி, விதவையை கலைக்கு அடிமையாக்கினார். இவை படத்தில் காட்சிபடுத்தப்பட்டு உள்ளது. இப்படத்தை அன்பு இமேஜின்ஸ் தயாரித்துள்ளது. இம்மாதம் இறுதியில் ரிலீசாகிறது.
Share this post :

Post a Comment

 
Copyright © 2013. jaffnafilms - All Rights Reserved