Home » » கொலை நோக்குப் பார்வை - முன்னோட்டம்

கொலை நோக்குப் பார்வை - முன்னோட்டம்

Written By AJENTH on Friday, March 22, 2013 | 12:22 AM

லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகர் தயாரிக்கும் படம் கொலை நோக்குப் பார்வை. இதில் நாயகனாக கார்த்திக்குமார், நாயகியாக ராதிகா ஆப்தே நடிக்கின்றனர்.

மேலும் பல நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர். அதற்கான தேர்வு நடக்கிறது. இப்படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதி நந்தினி இயக்குகிறார். இவர் ஏற்கனவே ‘திருதிரு துறுதுறு’ படத்தை டைரக்டு செய்தவர். திகில் நிறைந்த திரில்லர் கதையாக தயாராகிறது.

கிராமிய பின்னணியில் திரைக்கதை உருவாக்கப்பட்டு உள்ளது. கிராமத்தில் தொடர் கொலைகள் நடக்கிறது. கொலையாளி யார் எதற்காக அக்கொலைகள் நடக்கின்றன என்பது விறுவிறுப்பாக காட்சி படுத்தப்படும் என்றார் இயக்குனர். கிராமத்தில் நடக்கும் தொடர் கொலைகளை துப்பறியும் நிபுணராக கார்த்திக்குமார் வருகிறார்.

 படப்பிடிப்பு சென்னையில் துவங்கி ஊட்டி மற்றும் கேரளாவில் நடக்கிறது. இசை: அஸ்வத், ஒளிப்பதிவு: ஏ.வசந்த், பாடல்: லலிதானந்த், மதன் கார்க்கி, இப்படத்தின் கதையை நந்தினியும், சுஜாதா நட்ராஜனும் இணைந்து எழுதியுள்ளனர். இப்படத்தின் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் 1+1=3 என்ற பெயரில் உருவாகும் இன்னொரு படத்தையும் எடுக்கிறார்.

நடிகர், நடிகை தேர்வு நடக்கிறது. இப்படத்தை அறிவழகனிடம் உதவியாளராக பணியாற்றிய மணிகண்டன் இயக்குகிறார்.
Share this post :

Post a Comment

 
Copyright © 2013. jaffnafilms - All Rights Reserved