Home » » ரசிகர்களின் பாராட்டே எனக்கு மிகப்பெரிய விருது – அஜித்

ரசிகர்களின் பாராட்டே எனக்கு மிகப்பெரிய விருது – அஜித்

Written By admin on Tuesday, January 22, 2013 | 9:26 AM


ரசிகர்களின் பாராட்டு ஒன்றே போதும், எனக்கு விருது எல்லாம் தேவையில்லை என்று நடிகர் அஜித் கூறியுள்ளார்.

பில்லா-2 படத்திற்கு விஷ்ணுவர்தன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார் அஜித். இப்படத்தில் அஜித் உடன் ஆர்யா, நயன்தாரா, டாப்சி ஆகி‌யோரும் நடிக்கின்றனர்.

படத்தின் ஷூட்டிங் முடியும் தருவாயில் உள்ளது. ஆனால் இப்படத்திற்கு பெயர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அதேசமயம் படத்திற்கு பெயர் முடிவாகிவிட்டதாகவும், விரைவில் படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பை அறிவிப்பேன் என்று டைரக்டர் விஷ்ணுவர்தன் கூறியுள்ளார்.

 இந்நிலையில் அஜித் புதுமுடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதாவது 8 மாதத்திற்கு ஒரு புதியபடத்தை கொடுக்க எண்ணியுள்ளார்.

 இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது,

எட்டு மாதத்திற்குள் ஒரு படத்தை முடிக்க எண்ணியுள்ளேன். அதற்காக திட்டமிட்டு உழைத்து வருகிறேன். இந்த கொள்கையை மங்காத்தா படம் முதலே எடுத்துவிட்டேன். மேலும் எனக்கு விருது மேல் எல்லாம் ஆசை கிடையாது. மாறாக ரசிகர்களின் பாராட்டு ஒன்று மட்டும் எனக்கு போதுமானது என்று கூறியுள்ளார்.
Share this post :

Post a Comment

 
Copyright © 2013. jaffnafilms - All Rights Reserved