Home » , » இயக்குனராக மாறினார் கவர்ச்சி புயல்..!

இயக்குனராக மாறினார் கவர்ச்சி புயல்..!

Written By admin on Tuesday, January 22, 2013 | 9:43 AM

கொலிவுட்டில் அஜித் நடித்த பூவெல்லாம் உன்வாசம் படம் மூலம் அறிமுகமானவா் நடிகை சோனா.

அதன் பின்பு தெலுங்கிலும் பிரபலமாகி சுமார் 25 படங்களுக்கு மேல் நடித்தார். மீண்டும் தமிழில் “மிருகம்” “குசேலன்” படங்கள் முலம் பிசியானார் மலையாளத்திலும் பல படங்கள் நடித்து பிரபலமடைந்தார். தமிழில் “கோ” படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார்.

நடித்து கொண்டே அலங்கார ஆபரணங்கள் விற்கும் “யுனிக்” கடையை நடத்தி வருகிறார். யுனிக் புரொடக்ஷன் என்ற படநிறுவனத்தை நிறுவி படங்களை வினியோகம் செய்தார்.

அதே நிறுவனம் மூலம் “கனிமொழி” என்ற படத்தை தயாரித்தார். இப்படம் படுதோல்வியடைந்தது. தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். இதற்காக கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு திரைப்படகல்லுாரியில் பயின்றார். படத்திற்கு தேவ் என்று பெயர் சூட்டியுள்ளார்.

 இவரே தயாரித்து இயக்கும் இப்படத்தின் நாயகனாக தேவ் என்பவர் அறிமுகமாகிறார். பட நாயகனின் பெயர் தேவ் என்பதால் படத்தின் பெயர் தேவ் என்றே வைத்துள்ளார். மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தெரிவு நடைபெற்று வருகிறது.

 ஒருவனின் வாழ்க்கையில் ஏற்படும் காதல் என்கின்ற யதார்த்தமான உணர்வின் ஆழம்தான் “தேவ்” என்கிறார் சோனா. பிப்ரவரி முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Share this post :

Post a Comment

 
Copyright © 2013. jaffnafilms - All Rights Reserved