Home » » சினேகா கர்ப்பமாகவில்லை - பிரசன்னா

சினேகா கர்ப்பமாகவில்லை - பிரசன்னா

Written By AJENTH on Saturday, March 23, 2013 | 12:05 AM

சினேகா, பிரசன்னா திருமணம் கடந்த வருடம் மே மாதம் நடந்ததன் பின்னர் சினேகா தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழில் இரு படங்களும், தெலுங்கில் இரு படங்களும் அவரிடம் கைவசம் உள்ள நிலையில் சினேகா கர்ப்பமாக இருப்பதாக இணைய தளங்களில் தகவல்கள் பரவின.

இதற்காக சினிமாவில் நடிப்பதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளார் என்றும் கூறப்பட்டது. இதனால் ரசிகர்களும், திரையுலகினரும் இருவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

ஆனால் சினேகா கர்ப்பமாக இருக்கும் தகவலை பிரசன்னா மறுத்துள்ளார். அவர் கூறியதாவது: சினேகா கர்ப்பமாக இருப்பதாக தவறான தகவல் பரவியுள்ளது. இதனால் நிறைய பேர் எங்களை தொடர்பு கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

அவர் கர்ப்பமாக இல்லை என அவர் கூறினார். இதற்கிடையே சினேகாவின் அக்காவும் இதை மறுத்துள்ளார். அவர் கூறும் போது சினேகாவுக்கு உடனடியாக குழந்தை பெற்றுக் கொள்ளும் எண்ணம் இல்லை. சினிமாவில் நல்ல கதாப்பாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுவதால் குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளி வைத்துள்ளார்.

பிரகாஷ்ராஜின் புதிய படத்தில் தற்போது நடிக்க தயாராகிக் கொண்டு இருக்கிறார் என்றார்.
Share this post :

Post a Comment

 
Copyright © 2013. jaffnafilms - All Rights Reserved