சில்க் ஸ்மிதா வாழ்க்கை பற்றிய கதை, கன்னடத்தில் ‘சில்க் சக்கத் மகா’ என்ற சினிமாவாக த்ரிசூல் இயக்கத்தில் உருவாகிறது.
இதில் சில்க் ஸ்மிதா வேடத்தில் பாலிவுட் கவர்ச்சி நாயகி வீணா மாலிக் நடிக்கிறார்.
இவர் இப்படம் மூலம் தென்னிந்திய படத்தில் அறிமுகமாகிறார். இது குறித்து அவர் கூறுகையில், இப்படத்துக்கு பெரிய சம்பளம் வாங்கினேன். திறமை இருக்கும்போது அதற்கேற்ற சம்பளம் வரும். படத்தின் கதை கேட்கும் வரை சில்க் ஸ்மிதா பற்றி எனக்கு எதுவும் தெரியாது. கதை கேட்ட பின்னர், அவரை பற்றி இணையதளத்தில் குறிப்புகள் தேடாமல் தூங்கியது கிடையாது. ஒரு வருடம் இந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறேன்.
அவரது அசைவுகளை துல்லியமாக கவனிப்பதற்காக அவர் நடித்த படங்களை விசிடி, டிவிடி, யூ டியூபில் அடிக்கடி பார்ப்பேன். இந்த கதாபாத்திரத்துக்காக 13 கிலோ எடை கூடியிருக்கிறேன். அவருக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. அவரை போலவே சினிமாவுக்கு எந்த வழிகாட்டுதல் இல்லாமல் நான் வந்தேன். சில்க் போலவே நானும் கடினமாக உழைத்தே உயர்ந்திருக்கிறேன்.
பக்கத்து வீட்டு பெண்ணை பார்ப்பது போல என் தோற்றம் சாதாரணமாக இருக்காது. எனது தோற்றம் கவர்ச்சியானது. அதனால் எந்த பிரச்னையும் ஏற்பட்டதில்லை என்றும் கவர்ச்சியாக மட்டுமல்ல, விருதுக்காக உருவாகும் ஆர்ட் படங்களில் நடிக்கவும் விருப்பம் உண்டு எனவும் கூறியுள்ளார்.
ஏற்கனவே, சில்க் ஸ்மிதா வாழ்க்கை கதையை வைத்து எடுக்கப்பட்ட டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் நடித்த வித்யாபாலனுக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment