Home » , » காட்டுக்குள் களேபரம் செய்த அமலா பால்!

காட்டுக்குள் களேபரம் செய்த அமலா பால்!

Written By admin on Tuesday, January 22, 2013 | 9:45 AM

அமலா பால் இப்போது அலேக் அவதாரம் எடுத்துள்ளார்… இட்டரம்மாயிலதோ படத்துக்காக.

தெலுங்குப் படமான இதில், கையில் வாளும் கண்களில் குரோதமுமாக அதகளம் செய்துள்ளார் சண்டைக் காட்சிகளில். பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் அமலா பாலுக்கு நிறைய சண்டைக் காட்சிகளாம். அவருக்கு ஜோடியாக அல்லு அர்ஜூன் நடிக்கிறாராம். இந்தப் படம் முழுக்க முழுக்க சண்டைப் படம் கிடையாது.

 மாறாக அதிரடி காதல் படமாம். கூடவே நிறைய சண்டைக்காட்சிகளாம். படத்தில் அத்தனை பேரும் சண்டை போடும் அளவுக்கு நிறைந்திருக்கிறதாம் ஆக்ஷன் காட்சிகள். படத்தின் நாயகனான அல்லு அர்ஜூனுக்கு ஒரு தனிப் பெயர் உண்டு. அதாவது தெலுங்கு ஹீரோக்களிலேயே முதல் முறையாக சிக்ஸ் பேக் வைத்தவர் இவர்தானாம்.

 அதனால் இவருக்கு எனர்ஜி ஸ்டார் என்று கூட ஒரு பெயர் உண்டாம். அமலா பால் இப்படத்தில் நாயகியாக நடித்தாலும் அவர் கூட அவருடன் மேலும் ஒரு நாயகி்யும் இருக்கிறாராம். ஆனால் முதல் நாயகி அமலா பால்தானாம். அதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர்தான் காண்டிராக்டில் கையெழுத்தே போட்டாராம்.

 அமலா பால் சம்பந்தப்பட்ட சண்டைக் காட்சிகளை தாய்லாந்தில் உள்ள ஒரு அடர்ந்த காட்டில் வைத்து படமாக்கினராம். அப்போது அமலா பால் போட்ட சண்டையைப் பார்த்து மாஸ்டர் கிச்சாவே அசந்து போய் விட்டாராம். காரணம், அமலா பால் கத்தியைப் பிடித்த லாவகம் அப்படியாம்… பார்சிலோனா நகரில்தான் பாதிப்படத்தை ஷூட் செய்துள்ளனராம். பிற காட்சிகளை தாய்லாந்து, ஆந்திரக் காடுகளில் வைத்து சுட்டுள்ளனராம்.
Share this post :

Post a Comment

 
Copyright © 2013. jaffnafilms - All Rights Reserved