Home » » நடிகை வீட்டுக்கு சரக்கு போத்தல் அனுப்பும் நூதன போராட்டமாம்..!

நடிகை வீட்டுக்கு சரக்கு போத்தல் அனுப்பும் நூதன போராட்டமாம்..!

Written By admin on Tuesday, January 22, 2013 | 9:45 AM

சமர் படத்தின் பிரஸ்மீட்டில் நடிகை த்ரிஷா, தான் சரக்கடிப்பது போல அருந்துவது போல் சீன்கள் இடம் பெற்ற படங்கள் எல்லாமே செமத்தியாக ஹிட்டாகியுள்ளன.

எனவே `சமர்’ படத்திலும் அக்காட்சி இருக்க வேண்டும் என்பதற்காக மது அருந்துவதுபோல் நடித்தேன் என்றார். மேலும் பெண்கள் சரக்கடிப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது அது அவரவர் விருப்பம் என்று பதில் அளித்தார். த்ரிஷா கூறிய இந்த கருத்துக்கள் தமிழ்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தி தமிழ் கலாச்சாரத்துக்கு எதிராக அவர் பேசி உள்ளதாக இந்து மக்கள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது.

அதோடு மட்டுமில்லாமல் த்ரிஷா பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும், பேசியதை வாபஸ் பெற வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது. ஆனால் த்ரிஷா இதுவரை தான் பேசிய பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை. இதனால் கடுப்பான இந்து மக்கள் கட்சியினர் த்ரிஷாவின் இந்தச் செயலை கண்டிக்கும் விதத்தில் அடுத்த கட்டமாக மது பாட்டில்களை பார்சலில் அனுப்பி எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்துள்ளனராம்.

 இதுகுறித்து அந்தக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 மது அருந்துவது குறித்து த்ரிஷா சொன்னவை பண்பாட்டுக்கு எதிரான செயல். பெண்களை மது அருந்த தூண்டுபவை. இதற்கு வருத்தம் தெரிவிக்க கேட்டும் த்ரிஷா செவி சாய்க்கவில்லை.

எனவே அவருக்கு மது பாட்டில்கள் பார்சலில் அனுப்பப்படும். அதோடு மதுவின் தீமையை விளக்கும் புத்தகமும் வைத்து அனுப்பப்படும். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

 தலைவர்களே பார்த்து…… தொண்டர்கள் மதுவை குடித்துவிட்டு வெறும் பாட்டில்களை மாத்திரம் அனுப்பிவிடப்போகிறார்கள்…!
Share this post :

Post a Comment

 
Copyright © 2013. jaffnafilms - All Rights Reserved